கொரோனா பாதிப்பால் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 3.03 கோடி பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் குணமடைந்து வருகின்றனர். இருப்பினும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9.50 லட்சமாக உள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,334,331 என்றும், உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 950,157 என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,023,837 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,874,549 என்றும், பலியானோர் எண்ணிக்கை 202,213 என்றும், குணமானோர் எண்ணிக்கை 4,154,999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தின.
இந்த ஆய்வின் முடிவில் கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.