கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோபைடன் வெற்றி பெற்றார் என்பதும் அதேபோல் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்கள் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வருகை தர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி வருவதும் அந்த ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூருக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் சிங்கப்பூர் வருகை தருவதால் சிங்கப்பூரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும் அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க துணை அதிபர் கமல்ஹாசனின் சிங்கப்பூர் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகிறது