இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகியும் ஃபேஷன் டிசைனருமான விக்டோரியா பெக்காம், தன்னுடைய ரத்தத்தை பயன்படுத்தி தனது முகத்தை அழகுபடுத்தி வருகிறார்.
1994-ல் உருவாக்கப்பட்ட பாப் குழு 'ஸ்பைஸ் கேர்ள்ஸ்'. தற்போது இங்கிலாந்தில் இய்ங்கி வரும் பிரபல பாப் குழுக்களில் ஒன்றாக உள்ளது. இதில் ஒரு உறுப்பினாரக உள்ள இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம்மின் மனைவில் விக்டோரியா, தனது மேனி அழகினை எவ்வாறு பாதுகாக்கிறார் என்பது குறித்து வினோதமான தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பதிவு செய்துள்ள அவர் ‘என்னுடைய இரத்தத்தில் இருந்து செல்களைப் பிரித்து, அந்த செல்களைப் பயன்படுத்தி மாய்ஸ்ட்டரைஸர் தயாரிக்கப்படுகிறதுது. இந்த மாயஸ்ட்டரைஸரைப் பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்படும் அபாயம் இல்லை. இதன் மூலம்செல்களை மீண்டும் புதுப்பிக்க முடியும். இதைத் தயாரிக்க 1200 பவுண்டுகள் (ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்) செலவானது. ’ எனத் தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவின் இந்த வித்தியாசமான செயலால் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருங்கே கிடைத்து வருகிறது.