இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையில் புகை வெளியேற தொடங்கியதால் வெடித்துச் சிதறிம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியா தீவுகளில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. பாலி தீவில் உள்ள ஆகங் என்ற எரிமலை கடந்த 22ஆம் தேதி வெடிக்க தொடங்கியது. அதிலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. இந்த புகை 2300 அடி உயரத்துக்கு எழுந்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆகங் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை உடனடியாக அந்த பகுதியில் வெளியேற உத்தரவிட்டனர். அதன்படி ஆயிரக்கணக்கான குடும்பம் தங்களது கால் நடைகளுடன் வெளியேறி உள்ளது.
தற்போது 4ஆம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும்போது அதை சுற்றியுள்ள 10 கி.மீ தூரம் வரை அதன் பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடிக்கும் போது அதன் சத்தம் 12 கி.மீ தொலைவு வரை கேட்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.