வேலைக்குச் சேரும் இளைஞர்கள் தினமும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாம்பே ஷேவிங் சி.இ.ஓ ஷாந்தனு தேஷ்பாண்டே மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், நீங்கள் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருப்பீர்கள் என்றால் உங்கள் வேலைகளில் முழுதாய் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் தொடர்ந்து 4-5 ஆண்டுகளுக்கு நீங்கள் 18 மணி நேரம் உழைக்க வேண்டும், இப்படி வேலை செய்தால், எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு தன் கரிஉத்துக்கு மன்னிப்பு கோரினார்.