செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும்: பிரபல நிபுணர் கணிப்பால் பரபரப்பு!
செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும்: பிரபல நிபுணர் கணிப்பால் பரபரப்பு!
பூமியில் மனிதர்கள் ஆகஸ்ட் மாதம் வரை தான் இருக்க முடியும் எனவும் செப்டம்பர் மாதம் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் டேவிட் மீடே கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மீடே என்பவர் எண்களையும், பூமியில் நடக்கும் நிகழ்வுகளையும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளுடன் ஒப்பிட்டு எதிர் காலத்தில் நடப்பவற்றை துல்லியமாக கணிப்பதில் நிபுணர்.
சமீபத்தில் டேவிட் மீடே மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம் தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும் செப்டம்பரில் உலகம் அழிந்துவிடும் எனவும் கணித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடக்க இருக்கும் சூரிய கிரகணத்துக்கும் உலக அழிவிற்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அவர் கூறுகிறார். விண்வெளியில் உள்ள நிபுரு என்ற விண்கல் ஆகஸ்ட் மாதத்தில் எந்த நேரத்திலும் பூமையை தாக்கும் என்பதற்கான அறிகுறிதான் இந்த சூரிய கிரகணம்.
பைபிளில் கூறியுள்ளதை போல அந்த சூரிய கிரகணத்தால் பூமியின் பெரும் பகுதி இருட்டாக காணப்படும். சந்திரனும் கருப்பு சந்திரன் என்றே அழைக்கப்படும். இந்த உலக அழிவிற்கான அறிகுறிகளாக அவர் சிலவற்றை கூறுகிறார்.
சூரிய கிரகணமானது ஒவ்வொரு 33 மாதங்களுக்கு ஏற்படுகிறது. கிறிஸ்தவர்களின் கடவுளான ஏலோஹி என்ற வார்த்தை பைபிளில் 33 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் ஓரிகோன் மாகாணத்தில் உள்ள லிங்கன் கடற்கரையில் தோன்றுகிறது. இந்த ஓரிகோன் மாகாணம் அமெரிக்காவின் 33-வது மாகணம் ஆகும்.
இதுபோன்ற முழு சூரிய கிரகணம் கடந்த 1981-ஆம் ஆண்டு நடந்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு முன்னர். 33 என்ற எண்ணை மூன்று முறை கூட்டினார் 99 என்ற எண் வரும். இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் கடைசியாக மனிதர்கள் வாழும் மாதம் எனவும் செப்டம்பர் மாதம் உலகம் அழிந்துவிடும் எனவும் கூறியுள்ளார் டேவிட் மீடே.
ஆனால் இந்த கணிப்பு தவறானது, இதே போன்ற பல கணிப்புகளும் இதற்கு முன்னர் வந்துள்ளன. ஆனால் அவை எதுவும் பலிக்கவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.