போப் பிரான்சிஸ், இத்தாலிய இளைய தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இத்தாலி நாட்டில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, கடந்த ஆண்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது.
குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதற்கு அந்த நாட்டில் வசிக்கும் இளைய தம்பதிகளுக்கு உள்ள பணிச்சுமை, பொருளாதார சூழல்கள் காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்தாண்டு 4 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், இவ்வாண்டு குழந்தைகள் பிறப்பு விகிதத்தை 5 லட்சமாக அதிகரிக்கும் நோக்கில் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், போப்பிரான்சிஸ், இத்தாலியில் உள்ள இளைய தம்பதிகள் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதைவிட அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இளைய தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு பொருளாதார சிக்கல்தான் காரணம். இங்கு உழைப்பிற்கான ஊதியம் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளர்.