மார்க் ஸுக்கெர்பெர்க் அறிமுகம் செய்துள்ள மெட்டா நிறுவனத்தின் லோகோ வேறு நிறுவனத்துடையது என்ற தகவல் வைரலாகி வருகிறது.
மார்க் ஸுக்கெர்பெர்கின் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல செயலிகளும், தொழில்நுட்ப சாதனங்கள் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் உள்ளிட்ட தனது அனைத்து செயலிகள் மற்றும் தொழிநுட்பங்களையும் அடக்கிய நிறுவனமாக மெட்டா என்று தன் நிறுவனத்திற்கு பெயர் சூட்டியுள்ளார் ஸுக்கெர்பெர்க்.
இதற்கான அதிகாரப்பூர்வமான லோகோவும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அந்த லோகோ தாங்கள் பல காலமாக பதிவு செய்து பயன்படுத்தி வருவது என பெர்லினை சேர்ந்த M Sense Migrane என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்டா தனது புதிய லோகோவில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.