Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பவன முக்தாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

பவன முக்தாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!
தினமும் பல மணி நேரம்வரை கணினி முன்பு உட்காரவேண்டி உள்ளது. மேலும், பயணங்களின்போது வாகனங்களில் அதிக தொலைவுக்குப் பயணிக்கவேண்டி உள்ளது. 33 வகையான எலும்புகளின் கோர்வைதான் நமது முதுகெலும்பு.

 
எல்லாவிதமான முதுகு வலிகளுக்கும் யோகாசனம் மூலம் தீர்வு காணலாம். பவன முக்தாசனம்,  சுத்த வஜ்ராசனம், மர்ஜரி ஆசனம், புஜங்காசனம், வியாகராசனம், தாடாசனம், கட்டி சக்ராசனம், மகராசனம், தனுராசனம் இவை அனைத்தும் முதுகுவலியை சரிசெய்யக்கூடிய ஆசனங்கள்.
 
பவன முக்தாசனம்
 
முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். வலது காலை மடக்கி முட்டிப் பகுதியை வயிற்றுக்கு அருகே கொண்டுவர வேண்டும். பிறகு, பொறுமையாக கைகளைத் தூக்கி முட்டியை இரு கைகளாலும் நன்கு அணைத்தபடி முட்டியை மார்புக்கு  அருகே கொண்டுவர வேண்டும். இயன்றவரை மார்புக்கு நெருக்கமாக முட்டியைக் கொண்டுவர வேண்டும். இந்த நிலையிலேயே  10 விநாடிகள் வரை இருக்க வேண்டும். அல்லது 3 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர், கைகளை  மெதுவாக இறக்கிவிட்டு, காலையும் மெதுவாக இறக்க வேண்டும்.
 
இதேபோல இடதுகாலை உயர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு வலது - இடது கால்களை மாற்றி மாற்றி 3 முறை செய்ய வேண்டும். பிறகு இரு கால்களையும் மடித்து, இரு கைகளாலும் அணைத்தபடி, முட்டியை மார்புக்கு அருகே கொண்டுவந்து,  வயிற்றில் நன்கு அழுந்துமாறு வைத்துக்கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும்.
 
கீழ் மற்றும் நடு முதுகு வலிக்கு பவன முக்தாசனம் நல்ல பயிற்சி. வயிற்றுக்குள் இருக்கும் தேவையற்ற வாயுக்கள்  வெளியேறும். வயிற்றுக்கு நல்ல அழுத்தம் கொடுக்கப்படுவதால் மலச்சிக்கல் வராது. ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதுகு வலியை ஏற்படுத்தக் கூடிய காரணங்கள் பற்றி அறிவோம்