சுவையான சேலம் பேமஸ் தட்டு வடை செட் செய்வது எப்படி?

ஒவ்வொரு ஊருக்கும் பிரபலமான உணவு ஒன்று இருக்கும். அப்படி சேலத்தில் பிரபலமானது தட்டு வடை செட். சுவையான சேலம் தட்டு வடை செட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: தட்டு வடை, வரமிளகாய், பூண்டு, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு, இஞ்சி, கேரட், பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய்

புதினா, கொத்தமல்லி இலைகளுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு சேர்த்து க்ரீன் சட்னி அரைத்து தயார் செய்து கொள்ளவும்.

வரமிளகாயை தண்ணீர் சேர்த்து வேகவைத்து அதனுடன் உப்பு, பூண்டு, எண்ணெய் சேர்த்து நைஸாக அரைத்து கார சட்னி தயார் செய்து கொள்ள வேண்டும்.

கேரட், பீட்ரூட், வெங்காயத்தை நைஸாக சீவி நறுக்கிய கொத்தமல்லி இலையுடன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தட்டு வடைகளை வரிசையாக வைத்து அதன் மேல் காரச்சட்னி தடவி அதன்மேல் கேரட், பீட்ரூட் கலந்த சாலட்டை வைக்க வேண்டும்.

அதன்மேல் க்ரீன் சட்னி தடவை ஒரு தட்டையை வைத்து மூடி சாண்ட்விச் போல செய்தால் சூப்பரான சுவையான சேலம் தட்டு வடை செட் தயார்

சுவையான சிறுதானிய பொங்கல் செய்யலாம் வாங்க!

Follow Us on :-