தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாகு ரெசிபி!

தீபாவளிக்கு தித்திக்கும் பலகாரங்கள் செய்வது வழக்கம். அப்படியாக குழந்தைகள், பெரியவர்கள் விரும்பும் சுவையான நெய் மைசூர் பாகு செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: கடலைமாவு – 1 கப், நெய் – 150 மி.லி, சர்க்கரை – 1 கப், ஏலக்காய்,

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, கடலை மாவை சேர்த்து 5 நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ளவும்

வறுத்த மாவை சல்லடையில் போட்டி கட்டிகள் இல்லாமல் சலித்து அதனுடன் 150 மிலி நெய்யை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்

அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் போட்டு ஒரு கப் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

சர்க்கரை முழுவதும் கரைந்த பிறகு கலந்த கடலை மாவை கொட்டி 3 தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறவும்.

மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விட்டு கடாயில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைக்கவும்

ஒரு பெரிய தட்டில் நெய் தடவி, தயார் செய்த மைசூர் பாகை கொட்டி பரப்பி விட வேண்டும்.

Various Source

ஆறிய பின் சுவையான நெய் மைசூர் பாகு தயார், துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.

கொய்யா இலையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?

Follow Us on :-