உடலுக்கு நலம் தரும் சிறுதானிய இட்லி செய்வது எப்படி?

சிறுதானிய வகைகளில் அபிரிமிதமான நார்ச்சத்து மற்றும் புரதங்கள் உள்ளது. இது உடலுக்கு வலுவையும், தினசரி தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. சிறுதானியங்களை கொண்டு மெதுமெது இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான தானியங்கள் மற்றும் பொருட்கள்: வரகு, சாமை, குதிரை வாலி, தினை, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம்

வரகு, சாமை, குதிரைவாலி, தினை மற்றும் இட்லி அரிசியை தலா ஒரு கப் எடுத்து நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

உளுந்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன் வெந்தயம் சேர்ந்து ஊற வைக்க வேண்டும்.

நன்றாக ஊறிய பின் அவற்றை கிரைண்டரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக இட்லி பதத்திற்கு அரைக்க வேண்டும்.

Various source

இந்த சிறுதானிய மாவு வைத்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும்.

கொஞ்சம் கெட்டியான மாவாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசையாகவும் சுட்டு எடுக்கலாம்.

பிஸ்தா பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Follow Us on :-