எலும்பை வலுவாக்கும் பிரண்டை ஊறுகாய் ஈஸியா செய்யலாம்!

பிரண்டை ஒரு கொடி வகை தாவரம். ஆனால் இதன் மருத்துவ பயன்கள் எண்ணற்றது. முக்கியமாக எலும்புகளை வலுப்படுத்துதலுக்கு இது சிறந்த ஒன்று. பிரண்டையை வைத்து சுவையான சத்தான ஊறுகாய் எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: பிரண்டை – 100 கிராம், பூண்டு, மிளகாய் தூள், கடுகு, வெந்தயம், புளி, உப்பு, நல்லெண்ணெய்

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தோல் சீவிய பிரண்டை, புளி மற்றும் பூண்டு ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

கடுகு மற்றும் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

வதக்கிய பிரண்டை, புளி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து அதனுடன் அரைத்த பிரண்டை கலவை, மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

வறுத்து பொடித்த கடுகு, வெந்தயபொடியை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி பின் எடுத்து ஆற வைத்தால் சுவையான பிரண்டை ஊறுகாய் தயார்.

Various source

தித்திக்கும் திரட்டுப் பால் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

Follow Us on :-