தானிய வகைகளில் உடலுக்கு மிகவும் சத்து வாய்ந்தது கம்பு. கம்பை களி, கூழ் என பலவகைகளிலும் செய்து சாப்பிட்டால் உடல் வலு பெறும். கம்பை கொண்டு சுவையான, சத்தான கொழுக்கடை செய்வது பற்றி பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: கம்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துறுவியது, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், உப்பு தேவையான அளவு
கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தை தாளித்து பின் பாசிப்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பருப்பு சிவந்து வந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
வதக்கிய பின் தேங்காய் துறுவல், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
Various source
மிதமான கொதி வந்ததும் கம்பு (ரவையாக அரைத்தது) சேர்த்து வெந்த பின் இறக்க வேண்டும்.
ஆறிய பின் எடுத்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்தால் கம்பு கொழுக்கட்டை தயார்.