சுவையான ஆரோக்கியமான திணை பாயாசம் செய்யலாம் வாங்க!

தானிய வகைகளில் ஒன்றான திணை நார்ச்சத்து, ஊட்டச்சத்து மிகுந்தது. திணை அரிசி என்றும் அழைக்கப்படும் இதைக் கொண்டு இட்லி, தோசை, பாயாசம் என பல பட்சணங்களும் செய்யலாம். எளிதாக திணை பாயாசம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: கால் கப் திணை, பாசிப்பருப்பு, அரை கப் வெல்லம், 1 கப் பால், 3 தேக்கரண்டி நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, ஏலக்காய் பொடி.

கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் 2 தேக்கரண்டி நெய் விட்டு பாசிப்பருப்பை சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்னர் திணையை அதில் சேர்த்து வறுத்து 2 கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

Various source

2 விசில் வரும் வரை குக்கரை மூடி வைக்கவும். பிறகு நன்றாக வெந்த திணையையும், பருப்பையும் மசித்து விடவும்

Various source

அதனுடன் பொடித்து வைத்த வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை மிதமான சூட்டில் கிளறிவிட்டு பின்னர் பால், ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.

பின்னர் வறுத்து தயாரக வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து மிதமான சூட்டில் கிளறி இறக்கினால் சுவையான திணை பாயாசம் தயார்.

உடம்பை இரும்பாக்கும் கேப்பை களி சூப்பரா செய்யலாம்!

Follow Us on :-