Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மத்திய அரசுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட் - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி

மத்திய அரசுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட் - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி
, செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:03 IST)
தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு சென்றுள்ள உளவுத்துறை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழகத்தில் அதிமுகவின் மீதிருந்த ஒளிவட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது. அதுவும், மத்திய அரசுக்கு அடி பணிந்து செல்லும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், அதிமுகவின் முதுகில் சவாரி செய்து தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சித்து வருவது அப்பட்டமாக தெரிவதால், தேர்தல் வந்தால், தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது.
 
இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மீது மக்களின் மனநிலை என்ன என்பது பற்றிய தெளிவான அறிக்கையை உளவுத்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்பு பலரிடம் எடுக்கப்படவில்லை என்றாலும், பொதுமக்களின் மனதை பிரதிபலிக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிலரிடம் பல கேள்விகளுக்கு விடை பெற்று இந்த கருத்துகணிப்பு நடைபெற்றுள்ளது.
 
அந்த அறிக்கையில், 89 சதவீத பேர் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.  அதேபோல், அதில் இனியொரு முறை அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதே சமயம், அவர்கள் அனைவரும் திமுகவை ஆதரிக்கவில்லை. அதில், 46 சதவீதம் மட்டுமே திமுகவை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.

webdunia

 

 
மீதமிருப்பவர்கள், தூய்மையான எண்ணத்தோடு அரசியலுக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்யும் நபரை ஆதரிப்போம் எனக் கூறியுள்ளனர். இதில், ரஜினியை 19 சதவீத பேரும், விஜயை 9 சதவீத பேரும், கமல்ஹாசனை 4 சதவீத பேரும் ஆதரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அறிக்கையை கண்ட மத்திய அரசு என்ன முடிவெடுக்கும் எனத் தெரியாது. ஆனால், இதுகேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியடைந்ததாகவும், மாநில உளவுத்துறை அதிகாரிகள் மூலம் மத்திய அரசின் உளவுத்துறை அறிக்கை சரிதானா என கள ஆய்வில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் சோனியா: காங்கிரஸ் தலைவராகும் ராகுல்: தேர்தலுக்காக காத்திருப்பு!!