அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் குறைந்த வரியே விதிக்கப்படுவதாகவும், ஆனால் அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகளில் அதிக வரி விதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.இதற்காக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்த அவர் ஒவ்வொரு நாடும் அமெரிக்காவிற்கு விதிக்கும் வரியே அந்நாடுகளுக்கும் விதிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, நேற்று அமலுக்கு வந்த இந்த புதிய வரி விதிப்பு முறையால் இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் அமெரிக்கா வரி விதிக்கிறது. சீனாவின் இறக்குமதிகளுக்கு 34 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. இதற்கு உலக நாடுகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.