தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே பனிபோர் நிலவி வருவதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த பனிப்போர் தற்போது வெளிப்படை மோதலாக மாறியுள்ளதாம். பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணத்துக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் முற்றிவிட்டதாம்.
இவை ஒரு புறம் இருக்க இந்த பனிப்போர் மோதலானதற்கான காரணம் இன்றைக்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமா அல்லது ஜெயக்குமாரா என்பதால்தான் அந்த கேள்வி.
துணை முதல்வர் பதவி ஏற்கும் போது ஓபிஎஸ்-க்கு நிதி துறையும் வழங்கப்பட்டது. ஆனால், முன்னாள் ஜெயகுமார் தான் தற்போது வரை ஊடங்களில் நிதி துரை சார்ந்த அற்விப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதனால், ஓபிஎஸ் தனக்கு நிதி அமைச்சகம் கொடுக்கப்பட்ட பின்னரும் எடப்பாடியின் ஆதரவாளரான ஜெயக்குமார் தொடர்ந்து நிதி அமைச்சர் போலவே செயல்படுவதாக டெல்லி மேலிடத்தில் குறை சொல்லியிருக்கிறாராம்.
ஆனால், இவை எதை பற்றியும் கவலைப்படமால் மாதத்திற்கு நான்கு முறை சலிக்காமால் ஊடங்களுக்கு பேட்டி அளிக்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.