Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பிரதமர் மோடிக்கு பரிசு அளித்த கருணாநிதி...

பிரதமர் மோடிக்கு பரிசு அளித்த கருணாநிதி...
, திங்கள், 6 நவம்பர் 2017 (13:39 IST)
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்.


 

 
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற தினந்தந்தி பவளவிழாலில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வந்த மோடி, அந்த நிகழ்ச்சிக்கு பின் பகல் 12.30 மணியளவில் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
 
அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் கருணாநிதியை நலம் விசாரித்தனர். 
 
மோடியை திமுக செயல் தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார். அருகில் கனிமொழி, துரை முருகன் ஆகியோர் இருந்தனர். கருணாநிதியின் கைகளை பிடித்துக்கொண்ட மோடி, ஓய்வு எடுக்க டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த மோடி அதன் பின் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

webdunia

 

 
நீட் தேர்வு,  மீத்தேன் வாயு, ஹைட்ரோகார்பன் திட்டம், ஜி.எஸ்.டி உட்பட பாஜகவின் பல திட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான்: இவாங்கா டிரம்ப் நிகழ்ச்சியில் காலியாக இருந்த அரங்கம்