தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்று ஒருசில மாதங்கள் அமைதியாக இருந்த பின்னர் தற்போது திடீரென கோவை உள்பட ஒருசில நகரங்களில் அரசுப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் கவர்னர் சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டிருக்கிறேன்
ஆய்வில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது.
வளர்ச்சிப் பணியில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வு
சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
நேரடி ஆய்வை பலர் பாராட்டியுள்ளனர், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை
கட்டாயப்படுத்தியோ, வற்புறுத்தியோ எந்த கூட்டத்திற்கும் அதிகாரிகளை அழைக்கவில்லை -
ஆளுநர் * சட்ட நடைமுறைகளுக்கு மாறாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை
சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறிவுரை வழங்கவே அதிகாரிகளை அழைத்து ஆலோசனை
அசாமில் ஆளுநராக இருந்தபோதும் இதேபோல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதை அங்குள்ள மக்கள் பாராட்டியிருக்கிறார்கள்
தமிழகத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளை தமிழக அரசும் அமைச்சர்களும் பாராட்டியுள்ளனர்
இவ்வாறு ஆளுனர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.