Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்குமார் கட்சியின் வேட்பாளர் மனு நிராகரிப்பு...

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (14:14 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


 

 
நடிகர் சரத்குமார் அதில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து அவர் தேர்தலை சந்தித்து வந்தார்.
 
ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என அவர் அறிவித்திருந்தார். அதன்படி அந்தோணி சேவியர் என்பவரை அவர் களம் இறக்கினார்.
 
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் தினகரன், தீபா, மதுசூதனன் மற்றும் சரத்குமார் கட்சியின் வேட்பாளர் அந்தோணி ஆகியோர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 
 
வேட்பு மனுக்களை சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. அதில், சமத்துவ மக்கள்  கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அதோடு, அவருக்கான மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விவகாரம் சரத்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி..!

120 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக தலைவர் விஜய் அதிரடி..!

இன்றிரவும் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அதிமுக, திமுக 2 கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது!? - நீதிமன்றம் அளித்த உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments