Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்


மேஷம்
அ, ஆ, சு, சே, லி, லு
இன்று மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
ராசி பலன்கள்

ரிஷபம்
இ, உ, ஒ, வ, வி, வே,
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்

மிதுனம்
கா, கி, க, ச, ஞ, கு
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்

கடகம்
ஹ, ஹி, டி, டு, டே, டோ
இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9
ராசி பலன்கள்

சிம்மம்
ம, மி, மோ, ட, டி, டு
இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3
ராசி பலன்கள்

கன்னி
பே, போ, ர, ரி, பூ, ஷ
இன்று எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்

துலாம்
ர, ரி, தி, து, தே, த, ரே
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்

விருச்சிகம்
தோ, ந, நி, நோ, ய, இ, யு
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7
ராசி பலன்கள்

தனுசு
ப, பி, யே, பூ, த, ஜ, ஜி
இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7
ராசி பலன்கள்

மகரம்
ஜி, ஜோ, கா, க, கு, கூ, பே
இன்று துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5
ராசி பலன்கள்

கும்பம்
ஸ, சே, சோ, த, ஸீ, கு, கூ
இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5
ராசி பலன்கள்

மீனம்
தி, து, ஸ, தீ, ச, சி, த
இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3
ராசி பலன்கள்