செல்வம ் காட்டி ய வழியில ோ அல்லத ு கத்த ி காட்டி ய வழியில ோ இந்திய ா செல்லாமல ், அறிவ ு காட்டி ய வழியில ே ஆத்மஞானத்தால ் தூய்ம ை செய்யப்பட்ட ு, கட்டுத ் திட்டத்திற்க ு அடங்க ி நடக்கும ் ஆன்மீ க வழியில ் - கொள்க ை அளவில ் இந்திய ா முழுவதும ் சாதிமுற ை இயங்க ி வந்தத ு.
இந்தியாவைத ் தவிர்த்த ு மற்ற நாடுகளுள் ஒவ்வொன்றிலும், க்ஷத்திரியர்களுக்கு அதாவது கத்தியோடும் திகழும் வீரர்களுக்குத்தான் உயர்ந்த மரியாதை உண்டு. இந்தியாவிலோ மிகவும் உயர்ந்த மரியாதை அமைதி ததும்பும் மனிதனுக்கு, பிராம்மணனுக்கு, கடவுள்நிலை எய்திய மனிதனுக்கு உரியதாக இருக்கிறது.
மற்ற நாடுகளும் ஒவ்வொன்றிலும் சாதி முறை என்பது தனி மனிதன் அல்லது தனித்த ஒரு பெண்ணின் நலனை மட்டும் கருத்தில் கொண்டதாக அமைந்துள்ளது. மற்ற நாடுகளில் தனியொரு மனிதன்தான் பிறந்த சமூக அந்தஸ்தை விட்டு, தான் விரும்பும் எந்த மேல் வகுப்பையும் தாவி அடைவதற்குச் செல்வமோ அதிகாரமோ அறிவோ அல்லது அழகோ பெற்றிருந்தால் போதுமானது.
இந்தியாவிலும், ஒருவன் தன் தாழ்ந்த சாதியிலிருந்து அதை விடவும் உயர்ந்த சாதிக்கு அல்லது எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்து விளங்கும் சாதிக்கும் உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பிறர் பலம் பிறந்த இந்த நாட்டிலே, தன்னைப் போலவே தன் சாதியில் உள்ளவர்கள் அனைவரையும் உயர்த்தி முன்னேற்றம் அடையும்படி ஒவ்வொருவனும் செய்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.
உண்மையில் சாதி என்றால் என்ன என்பதை லட்சத்தில் ஒருவர்கூடச் சரியாக அறிந்து கொள்ளவில்லை. உலகில் சாதி இல்லாத தேசமே கிடையாது.
இந்தியாவில் நாம் சாதி என்னும் கீழ்ப்படியில் தொடங்கிச் சாதியற்ற மேல்நிலையை அடைகிறோம். சாதி என்பது இந்தத் தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவில், பிரம்மணன் என்பவன் மனித சமுதாயத்தின் இலக்கியமாவான், இலட்சிய புருஷனாவான். ஆகவே ஒவ்வொரு மனிதனையும் பிராம்மணனாக்குவது சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய வரலாற்றைப் படித்துப் பார்ப்பீர்களேயானால் கீழ் வகுப்பாரை மேலே கொண்டு வருவதற்கு எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருப்பதைக் காண்பீர்கள்.
சாதி ஏற்பாடு வேதாந்த மதத்திற்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமே தவிர வேறில்லை.
webdunia photo
WD
நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் சாதி பேதத்தை ஒழிக்க எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள். பெளத்த மதம் முதற்கொண்டு அதற்குப் பிறகு தோன்றிய ஒவ்வொரு மத வகுப்பினரும் சாதி வேற்றுமையை எதிர்த்தே பிரசாரம் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்த முயற்சி ஒவ்வொரு தடவையும் சாதியை உறுதிபடுத்தியதே தவிர வேறு பயனில்லை
இந்தியாவின் அரசியல் ஸ்தாபனங்களிலிருந்து வளர்ச்சி பெற்றதே சாதியாகும். அதைப் பரம்பரையாக வரும் தொழிற்சங்க முறை என்று சொல்லலாம்.
சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத் தொடர்புடையனவாக வெளிப்பார்வைக்குத் தோன்றியபோதிலும் உண்மையில் அவை அத்தகையன அல்ல. நம்மை ஒரு தனிச் சமூகமாகக் காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் ஒரு காலத்தில் அவசியமாக இருந்து வந்திருக்கின்றன. தற்காப்புக்கு அந்த ஏற்பாடுகள் அவசியம் இல்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது அவை இயற்கை மரணமடைந்து மறையும்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதி ஏற்பாட்டைக் காட்டிலும் இந்தியச் சாதி ஏற்பாடு சிறந்ததாகும். அது முற்றிலும் நல்ல என்று நான் சொல்லவில்லை. சாதி இல்லாவிட்டால் இப்போது உங்கள் கதி என்னவாயிருக்கும்? உங்கள் கல்வியும் பிறவும் என்ன கதி அடைந்திருக்கும்? சாதிப் பிரிவு இல்லாமலிருந்தால், ஐரோப்பியர்கள் இந்தியாவைக் குறித்துக் கற்றறிந்து கொள்வதற்கு ஒன்றுமே எஞ்சியிருந்திருக்காது என்பது நிச்சயம். முகம்மதியர்கள் எல்லாவற்றையுமே அழித்துத் துகள்துகளாக்கியிருப்பார்கள்.
இந்து மதம் எங்கே அசைவற்று நிற்கிறது? அது எப்போதும் முன்னோக்கி அசைந்து கொண்டே தான் இருக்கிறது. அந்நிய நாட்டுப் படையெடுப்புகள் நிகழ்கிற காலங்கிளல் அதன் இயக்கம் மெதுவாகத்தான் இருக்கும். மற்றக் காலங்களில் விரைவாகப் போகும். என்னுடைய நாட்டு மக்களுக்கு இதைத்தான் சொல்கிறோம். அவர்கள் மீது நான் குறை சொல்லவில்லை. நான் அவர்களுடைய பண்டைக் காலத்தை உற்று நோக்குகிறேன். அந்தச் சூழ்நிலைகளில் எந்த நாடும் அத்தகைய புகர் வாய்ந்த செயலைச் செய்திருக்க முடியாதுதான். நல்ல விதமாகச் செயலாற்றியிருக்கிறார்கள் என்றே அவர்களிடம் நான் கூறுகிறேன். ஆனால் இன்னும் சிறப்பாகச் செயலாற்றும்படி அவர்களை வேண்டுகிறேன்.
சாதி இடையறாது மாறிக் கொண்டேதான் இருக்கும். சடங்குகளும் உருவங்களும் மாறத்தான் செய்யும். ஆனால் அதன் சாராம்சம் விளங்கும் அடிப்படையான தத்துவம் எதுவோ அது மாறவே மாறாது.
சாதி அடியோடு போக வேண்டியதில்லை. ஆனால் அதைக் காலத்திற்கேற்ற வகையில் அடிக்கடி சீர்திருத்தி அமைப்பது அவசியமாகும். அந்தப் பழைய சாதி ஏற்பாட்டில் இருநூறாயிரம் புதிய ஏற்பாடுகளை அமைப்பதற்கு வேண்டிய ஜீவ சக்தி இருக்கிறது. சாதியை அடியோடு அழிக்க விரும்புவது அறிவீனமாகும். பழைய அமைப்பின் பரிணாம வளர்ச்சியை புதிய முறையாகும்.
நமது தாய் நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருக்கும் கடன் மகத்தானதாகும். நாட்டுக்கு நாடு எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் பொறுமையுள்ள இந்துவுக்கு, சாதுவான இந்துவுக்கு உலகம் கடமைப் பட்டிருப்பதைப் போன்று, பூமியில் வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்.
பல நாடுகள் அவை சிறப்பாக ஓங்கி வாழ்ந்த காலங்களில் பல உயர்ந்த உண்மைகளைப் பிற நாடுகளில் பரப்பி வந்திருக்கின்றன. ஆனால் அவை எப்போதுமே யுத்த பேரிகைகளைக் கொண்டும், ஆயுதம் ஏந்திய சேனைகளின் துணை கொண்டும்தான் செய்யப்பட்டிருக்கின்றன. பிற நாடுகள் தங்களின் ஒவ்வோர் எண்ணத்தையும் இரத்த வெள்ளத்தின் மூலமாகவும், லட்சக்கணக்ான மக்களை வதைப்பதன் மூலமாகவுமே பரப்பி வந்திருக்கின்றன. இது தான் மற்ற நாடுகளின் சரித்திரம் நமக்குப் போதித்திருக்கிறது.
ஆனால் இந்தியாவோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சமாதானமாகவே இருந்து வந்திருக்கிறது, வரலாற்றிலே குறிப்புக்களே கண்டுபிடிக்க முடியாத, சரித்திரமே புக முடியாத மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் நமது இந்தப் பாரத நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன. ஆனால் இவை யாவும் அன்புடனும், வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே சென்றிருக்கின்றன.
இந்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும். யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடு தோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய் நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார். இந்தியாவின் வீழ்ச்சி, பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு உரிய நியாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.