Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் பெருகும் நாள்! – இன்றைய ராசி பலன்கள்(12.02.2024)!

astro

Prasanth Karthick

, திங்கள், 12 பிப்ரவரி 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும், அபிவிருத்தியும் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சினையும் இன்றி வசூலாகும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மிதுனம்
இன்று தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, குடும்ப விஷயங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் தெம்புடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்
இன்று உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறைந்து கண்ணியமிக்க வாழ்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் கடந்த காலங்களிலிருந்த மருத்துவச் செலவுகள் அனைத்தும் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எந்தவொரு காரியங்களிலும் மிகவும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி
இன்று வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இதுவரைபட்ட கஷ்டநஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

துலாம்
இன்று பணம் பலவழிகளில் தேடிவருவதால் பொருளாதாரநிலை மிகமிகச்சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சேமிப்பு பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்
இன்று கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வம்பு, வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிதமான லாபமும், நல்ல வளர்ச்சியும் உண்டாகும். இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள், கஷ்டநஷ்டங்கள் அனைத்தும் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9   

மகரம்
இன்று வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் மேன்மேலும் லாபத்தைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபம் பெருகும். புதிய கிளைகளைக்கூட நிறுவமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உற்சாகமாகச் செயல்படுவார்கள். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்
இன்று உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும். உத்தியோக உயர்வுகளால் பொருளாதார நிலையும் உயரும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பணவரவுகள் தாராளமாக அமையும். கடன்கள் குறையும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகமும், சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்கணுமா.? ஆன்லைனில் டிக்கெட் பெற தேதி அறிவிப்பு..!!