Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! – இன்றைய ராசி பலன்கள்(16.03.2024)!

astro

Prasanth Karthick

, சனி, 16 மார்ச் 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

ரிஷபம்:
இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்கள் மூலம் நன்மை உண்டாகும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி  உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.  பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும். அறிவுதிறன் அதிகரிக்கும். உழைப்பு கூடும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்:

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உழைத்த உழைப்பிற்கு மேலிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடி அலைபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரத்து அதிகரிக்கும். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

சிம்மம்:
இன்று முன்னேற்றங்கள் உண்டாகும். முயற்சிகள் சாதகமானபலன் பெறும். ஆனால் வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும்  போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பணம் இருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை உண்டாகும்.  சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கன்னி:

இன்று வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம்.  காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கையில்  சுகமும், நிம்மதியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

துலாம்:
இன்று பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்து வந்து போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்:
இன்று மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம்  உண்டாகும். சிலருக்கு வசதியான வீடு அமையும். எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுமுகமானநிலை உண்டாகும். எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

தனுசு:

இன்று எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும்.  ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டி பந்தயங்களில் கவனம் தேவை.  தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

மகரம்:
இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாள். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கும்பம்:
இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம்  பிறக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மீனம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண்விவாதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(15.03.2024)!