Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (16:12 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
கடினமான காரியங்களையும் திறமையாக செய்து முடிக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு  ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம்  சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு  இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.  பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக  காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு  நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும்  அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக  வைத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

கலைத்துறையினர் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வாய்ப்புகள் நிறைய வரும்.

அரசியல் துறையினர் புதுத் தெம்புடன் இருப்பார்கள். சிலர் உங்கள் மீது பொறாமையில் இருப்பார்கள். உங்கள் முடிவுகளை தெளிவாக எடுங்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்கள் சிறிய அளவில்  நன்மையையும், பொறுமையையும் பெறக்கூடிய கால கட்டம், வேண்டிய அளவில்கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சன்மானம் உங்களுக்கு கிடைக்கும். 

ரேவதி:
இந்த மாதம் திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணபுழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை தலைதூக்கலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்டை கடலை நிவேதனம் செய்து வணங்குவதும்  வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments