சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரக நிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும், கேது பகவான் சுக ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.
17-09-2020 அன்று காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-09-2020 அன்று பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-09-2020 அன்று காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
கூடுதலாக உழைக்க காத்திருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன் றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் ஆன்மீக பயணங்கள் சென்று வருவீர்கள்
கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.
பெண்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.
மகம்:
இந்த மாதம் உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.
பூரம்:
இந்த மாதம் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல்போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
உத்திரம் 1ம்- பாதம்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம், பிரவுன்
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5,
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25