Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் டெல்லியில் ஆலோசனை, தேர்தல் ஆணையத்திடம் மனு

காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் டெல்லியில் ஆலோசனை, தேர்தல் ஆணையத்திடம் மனு
, செவ்வாய், 21 மே 2019 (20:48 IST)
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இணைந்து...
 
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்தது. இதில் 67.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் தில்லியில் அணி திரண்டு தேர்தல் முவுவுகளுக்குப் பின் எவ்வாறு செயல்பட வேண்டுமென விவாதித்தனர்.
 
சந்திரபாபு நாயுடு இந்த கட்சிகளை ஒன்றிணைப்பதில் தீவிரமாக செயல்பட்டார். ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்த அவர்,பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜிரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்திருந்தார்.
 
அதன் தொடர்சியாக இந்த கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
 
அதன் பின்னர், இந்த தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.
 
ஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்திருந்தால், ஒட்டு மொத்த தொகுதியிலும் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு முன்பே தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கை நிராகரித்து இருந்தது தேர்தல் ஆணையம்.
 
இந்த சூழலில், எதிர்கட்சிகளின் இந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
 
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) மோசடிகள் நடைபெறுவதாக வெளியாகும் செய்திகளால் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்திருகிறார்.
 
"இது வாக்காளர்களின் தீர்ப்பை சேதப்படுத்துகின்ற நடவடிக்கை" என்று கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, "அமைப்பின் நேர்மையை உறுதி செய்கின்ற பொறுப்பு தேர்தல் ஆணையத்தை சேர்ந்தது" என்று கூறியுள்ளார்.
 
மேலும், "தேர்தல் ஆணையத்தின் பொறுப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
உத்தர பிரதேசம், பிகார், பஞ்சாப் மற்றும் ஹரியானா மின்னணு நடைபெறுவதாக வெளியாகும் தொடர் காணொளி பதிவுகள், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மோசடிகள் நடைபெறுவதை உறுதி படுத்துகின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்ற நிலையில், முன்னாள் குடியரசு தலைவரின் இந்த கூற்று வந்துள்ளது.
 
"ஜனநாயகத்தின் அடிப்படையை சவாலுக்குட்படுத்தும் எந்தவொரு அனுமானங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. மக்களின் தீர்ப்பு புனிதமானது. இதில் எவ்வித ஐயமும் ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும்" என்று முகர்ஜி தெரிவித்துள்ளார்.
 
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென் தொடங்கி, இன்றைய தலைமை தேர்தல் ஆணையர் வரை அனைவரின் செயல்பாடுகளையும் பிரனாப் முகர்ஜி புகழ்ந்து பேசிய மறுநாள் இந்த கருத்து வந்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது" - ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே