ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் தீ அணைப்பு வீரர், தான் கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல், பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கேட் ராபின்சன் வில்லியம்ஸ் என்ற 14 வார கர்ப்பிணி பெண், இந்தப் பணியில் ஈடுபட வேண்டாம் என தமது நண்பர்கள் அறிவுறுத்தியதாகக் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் ''நான் பின்வாங்கப் போவதில்லை'' என அவர் தன் புகைப்படத்துடன் சேர்த்து பதிவு செய்திருந்தார். அந்த பதிவை பார்த்த பலர் அவரை இப்பணியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.
கேட் ராபின்சன் வில்லியம்ஸ் 11 ஆண்டுகளாக நியூ சவுத் வேல்ஸ் கிராமப்புற தீயணைப்பு சேவையுடன் சேர்ந்து தன்னார்வ தீ அணைப்பு வீரராக செயல்பட்டுவருகிறார்.
நான் முதலில் கர்ப்பிணி தீ அணைப்பு வீரர் இல்லை என பிபிசி யிடம் அவர் தெரிவித்தார். நான் இன்னும் உதவ முடியும் என்ற நிலையில் இருப்பதால், இந்த பணியை செய்வேன் என்றும் மேலும் தெரிவித்தார்.
காட்டுத்தீயால் ஆஸ்திரேலியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சுமார் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
'உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை'
கடந்த திங்கள்கிழமை அன்று இன்ஸ்டாகிராமில்கேட்ராபின்சன் - வில்லியம்ஸ் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு செல்லும் வழியில் தீயணைப்பு கருவிகளை அணிந்தபடி தன்னுடைய பல படங்களை பதிவு செய்யதார்.
தன்னுடைய புகைப்படங்களுக்கு தலைப்பாக ''ஆம். நான் தீ அணைப்பு வீரர். ஆனால் நான் ஆண் இல்லை. ஆம் நான் கருவுற்றிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை,'' என்று பதிவுசெய்திருந்தார்.
இந்த பதிவுக்கு பலரின் ஆதரவு கிடைத்தது. அனைத்து பெண்களுக்கும் இவர் உந்துசக்தியாக விளங்குகிறார் என பலரும் நெகிழ்ந்தார்.
அவரின் பல நண்பர்கள் நீ இந்த பணியை செய்ய கூடாது என கூறிய பிறகே, இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்ததாக ஹண்டர் வேலியை சேர்ந்த ஒரு தன்னார்வ தீ அணைப்பு வீரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
''நான் நன்றாக இருக்கிறேன், இந்த பணியை நிறுத்தப் போவதில்லை என்று அவர்களிடம் சொல்ல விரும்பினேன்,"என்று கூறினார் கேட். "என் உடல் என்னை நிறுத்தச் சொன்னால் மட்டுமே நான் நிறுத்துவேன்,'' என கேட் மேலும் தெரிவித்தார்.
''நான் சரியான உபகரணங்களை அணிந்திருக்கும் வரை," எனக்கு எந்த இடையூறும் இல்லை என மருத்துவர் தெளிவுபடுத்தியுள்ளார் எனவும் கேட் ராபின்சன் வில்லியம்ஸ் கூறினார்.
குழந்தை பராமரிப்பு துறையில் பணிபுரியும் ராபின்சன்-வில்லியம்ஸ், தன்னார்வ தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர்.
1995 ஆம் ஆண்டு முதல் கட்டமாக காட்டு தீ ஏற்பட்டபோது என் அம்மாவும் கருவுற்றிந்தார். நான் சிறு வயதில் இருந்தபோது தீ அணைப்பு வீரராக செல்லவேண்டும் என்பதற்காக குழந்தைகள் அணியும் வகையில் தீ அணைப்பு வீரர் ஆடையை என பாட்டி வடிவமைத்து கொடுத்தார்.
மேலும் அவரது பாட்டி உட்பட தன் குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் இன்னும் தன்னார்வ தீ அணைப்பு வீரர்களாக பணியாற்றுகின்றனர் . இது நாங்கள் குடும்பமாக செய்யும் தன்னார்வ தொண்டு. என் பாட்டி 50 ஆண்டுகளாகவும் என் அம்மா 30 ஆண்டுகளாகவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
என் கணவர் மற்றும் என் கணவர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இவ்வாறு பணியாற்றிவருகின்றனர்.
என் குழந்தையும் இந்த தொண்டு செய்யும் என நம்புகிறேன். ஆனால் அது முற்றிலும் அவர்கள் விருப்பம்.
தீயை எதிர்த்துப் போராடும்போது பயமாக இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டவுடன், ''இல்லை '' என ராபின்சன்-வில்லியம்ஸ் பதில் சொன்னார்.
நேற்று கடுமையான நெருப்பின் அருகில்தான் இருந்தேன், வீட்டிற்கு பின்புறத்தில் தீப்பிடித்தது, நாங்கள் அதை போராடி அனைத்தோம் . இது நான் எப்போதும் செய்து கொண்டிருக்கும் பணி.
ஆறு மில்லியன் மக்கள் நியூ சவுத் வேல்ஸ்சில் வாழ்கின்றனர். கடந்த புதன் கிழமை அன்று சிட்னி வரை இந்த தீ பரவியது.