Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உகாண்டாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் மக்கள்- கணக்கெடுப்பில் குழப்பம்?

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (19:53 IST)
உகண்டாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து வாழ்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் அதிகமாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான இடம்பெயர்வோர் மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கும் உகண்டாவுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன.

1890-களில் சுமார் 40,000 இந்தியர்கள், பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தவர்கள் கென்யாவில் உள்ள மொம்பாசாவுக்கும் உகண்டாவில் உள்ள கம்பாலாவுக்கும் இடையேயான ரயில் தடத்தை கட்டியமைக்க உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

1972-ல் அவர்கள் உகண்டாவிலிருந்து சர்வாதிகாரியான இடியமீனின் உத்தரவால் `உகண்டாவின் பணத்தை உறிஞ்சுபவர்கள்’ என குற்றஞ்சாட்டப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டார்கள்.

இப்போது 2019 ல் இன்னொரு தொடர்பு இருப்பது, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முழு கணக்கெடுப்பும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெரும். ஆனால், இதன் சில தகவல்கள் இப்போதுதான் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை பத்து ஆண்டுகளில் 181 மில்லியனிலிருந்து 1.21 பில்லியன் வரை அதிகரித்துள்ளது என்கிறது புள்ளிவிவரம்.

இதில் சமீபத்தில் வெளியான இடம் பெயர்வோர் புள்ளி விவரத்தில் உகண்டாவிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 2001ல் 694 ஆக இருந்து 2011-ல் 1,51,363 ஆக உயர்ந்துள்ளது.

பெண்களின் எண்ணிக்கை 339 லிருந்து 111700 ஆக உயர்ந்துள்ளது மற்றும் ஆண்களின் எண்ணிக்கை 335 லிருந்து 39663 ஆக உயர்ந்துள்ளது.

வங்கதேசம், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு பிறகு ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள உகண்டாவிலிருந்துதான் மக்கள் இந்தியாவிற்கு அதிகம் இடம் பெயர்கிறார்கள். இவர்கள் உகண்டாவின் குடிமக்களாகவும் இருக்கலாம் அல்லது இந்திய குடிமக்கள் அங்கே சென்று மீண்டும் இங்கே திரும்பி வந்தவர்களாக இருக்கலாம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்தது போல பஞ்சாப்பிற்கு வருபவர்கள் மிகவும் குறைவு. இப்போது உத்திரபிரதேச மாநிலத்திலும் பிகார் மாநிலத்திலும் தான் அதிகம் இடம் பெயர்கிறார்கள். இந்த மாநிலங்களில் 2001-ல் 5 ஆக இருந்த எண்ணிக்கை 2011-ல் 94,507 ஆக உள்ளது.

இந்த எண்ணிக்கையானது ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பின் முட்டாள் தனமான தவறை குறிக்கிறது அல்லது மிகவும் முக்கிய குறிப்பிடப்படாத சமூக நிகழ்வைக் குறிக்கிறது. அனேகமாக முதலாவதாக தான் இருக்கக்கூடும் என்கிறார் சின்மே டும்பே என்ற இடம் பெயர்வு நிபுணர்.

அதற்கு இரண்டு காரணங்கள்

ஒன்று எண்ணிக்கையில் உள்ள மிகப்பெறும் பாலின ஏற்றத்தாழ்வு.

மற்றொன்று, 77,000க்கும் மேற்பட்ட மக்கள் பத்து வருடத்திற்கும் மேலாக இந்தியாவில் வாழ்கிறோம் என கூறுகின்றனர். ஆனால் 2001 ல் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெறும் 694 மக்கள் தான் பதிவில் உள்ளார்கள்.

அதனால் தவறாக இருக்கதான் பெருமளவு வாய்ப்புள்ளது என்கிறார் டும்பே.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்படும் கேள்விகளில் இந்த நாட்டில் வாழ்வதற்கு முன்னால் எந்த நாட்டில் வாழ்ந்தீர்கள் என்று கேட்கப்படும். இந்த கணக்கெடுப்பை எடுப்பவர்கள் அதற்கான பதிலை எழுத வேண்டும். இவைதான் இதற்கான சிறியதொரு ஆவணமாக உள்ளது.

பதில் எழுதப்பட்ட இந்த கேள்வித்தாள்கள் வரிமம் (ஸ்கேன்) செய்யப்பட்டு, தரவுகளை கொண்டு கணினி மென்பொருட்கள் அட்டவணைகள் உருவாக்குகின்றன. இந்த விவர பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, பொது மக்கள் பார்க்க வழங்கப்படுகின்றது.
இதற்கு முன்னால் வாழ்ந்த நாடாக அதிகமானோர் உகாண்டாவை குறிப்பிட்டு, நிகழ முடியாத இடம்பெயர்வு எண்ணிக்கை என்று நம்பப்படுவது பற்றி விசாரணை தொடங்கவுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பின மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments