Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்!!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (14:42 IST)
இருநூறு ஆண்டுகள் பழமையான உலகப் புகழ் பெற்ற ஜானி வாக்கர் நிறுவனத்தின் விஸ்கி இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
 
ஜானி வாக்கர் விஸ்கி தயாரிப்பு உரிமம் தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
சூழலியலுக்கு இணக்கமான இந்த முயற்சியை அடுத்த ஆண்டிலிருந்து சோதனை செய்து பார்க்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கிகள் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்களில் கிடைக்க, தனது பிற பிராண்டுகளில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. 
 
கண்ணாடி பாட்டிகளும் கரியமில வாயு வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பேப்பர் பாட்டில்களை தயாரிக்க பல்பெக்ஸ் எனும் துணை நிறுவனத்தை டியாஜியோ தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் யுனிலீவர் மற்றும் பெப்ஸிகோ நிறுவனத்துக்குத் தேவையான பாட்டில்களையும் தயாரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனுடன் மனைவி எடுத்த செல்பி! மாமியார் வீட்டுக்கே அனுப்பி செய்த ரகளை!

ராகுல் காந்தி பொய் சொல்கிறார்; தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக..!

பேஜர் தாக்குதலை உளறிய நேதன்யாகு! பழிவாங்க ஏவுகணைகளை பறக்கவிட்ட ஹெஸ்புல்லா!

தங்கம் விலை தொடர் இறக்கம்.. 60 ஆயிரத்தில் இருந்து 56 ஆயிரம் வந்துவிட்டதா?

மேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments