பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்.
அவருடைய தலைமைத்துவத்திற்கு எதிராக சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தபோதும் அவர் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் அவரின் அதிகாரம் வலுவிழந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவீத வாக்குகளை பெற்று போரிஸ் ஜான்சன் தன் பதவியை தக்க வைத்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர்.