Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் கொடிய சார்ஸ் தாக்குதலை விஞ்சியது!

கொரோனா வைரஸ் கொடிய சார்ஸ் தாக்குதலை விஞ்சியது!
, சனி, 1 பிப்ரவரி 2020 (14:34 IST)
இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் 258 பேர் இறந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்திலிருந்து 324 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதில் 211 மாணவர்களும் அடங்குவர். இவர்களுக்காக, ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது.
 
இதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
2003ஆம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸை இந்த கொரோனா வைரஸ் விஞ்சி உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக சார்ஸால் 24க்கும் அதிகமான நாடுகளில் 774 பேர் பலியானார்கள். இப்போது வரை கொரோனோ வைரஸால் 258 பேர் சீனாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
 
2003ஆம் ஆண்டு எட்டு மாதம் சர்வதேச அளவில் பல நாடுகளை வாட்டிவதைத்த சார்ஸ் 8,100 பேரை தாக்கியது. இப்போது வரை கொரோனோ வைரஸ் 10,000 பேரை தாக்கி உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் விவகாரத்தில் ரஜினி பேசியது நியாயமானது - ராஜேந்திரபாலாஜி