Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா?

தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா?
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (20:22 IST)
தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்தால் தூக்கம் வரும்; இதை குடித்தால் தூக்கம் அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு விதமான கட்டுக்கதைகளால் ஒருவரது உடல்நிலை பாதிப்படைவதோடு, ஆயுட்காலம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு செய்ய வேண்டியவைகளாக இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரவலான விடயங்களை நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேடி கண்டறிந்து பட்டியலிட்டனர்.
 
இந்நிலையில், 'ஸ்லீப் ஹெல்த்' என்னும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்ட இதே போன்றதொரு ஆராய்ச்சி முடிவுடன், பட்டியலிடப்பட்ட காரணங்களை ஒப்பிட்டு பார்த்தனர்.
 
அதில், தூக்கம் பற்றிய கட்டுக்கதைகள் ஒருவரது உடல்நிலையில் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.
 
என்ன, நீங்கள் பயப்படுகிறீர்களா? கொஞ்சம் கீழுள்ள கட்டுக்கதைகளை நம்பியவர்களில் நீங்களும் ஒருவரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
 
கட்டுக்கதை 1 - ஐந்து மணிநேரத்திற்கு குறைவான தூக்கம் போதுமானது
இந்த கட்டுக்கதை பழங்காலத்திலிருந்தே சுழன்று கொண்டிருக்கிறது. இதில் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், இதை ஆதரிக்கும் வகையிலான வாதங்களுக்கு முன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சர், ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல் போன்ற தலைவர்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர்.
 
இந்நிலையில், ஒரு நாளைக்கு இரவில் ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக தூங்குவது போதுமானது என்னும் கூற்று இருப்பதிலேயே மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கட்டுக்கதை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக தூங்குவதால் உடலுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நிரூபிப்பதற்கு எங்களிடம் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன" என்று கூறுகிறார் ரெபெக்கா என்னும் ஆராய்ச்சியாளர்.
 
தேவைக்கு குறைவான நேரம் தூங்குவதால் மாரடைப்பு, பக்கவாதம், ஆயுட்காலம் குறைவுவது உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவிக்கிறார்கள்.
 
கட்டுக்கதை 2 - தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா?
 
நீங்கள் தூங்குவதற்கு முன்னர் பீர், ஒயின், விஸ்கி உள்ளிட்ட எந்த மதுபான வகையை அருந்தினாலும் அதனால் தூக்கம் அதிகரிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"மதுவை அருந்துவதால் உங்களுக்கு தூக்கம் வேண்டுமானால் வரலாம். ஆனால், உண்மையில் பார்த்தோமானால் மதுபானம் அருந்துவது ஒருவரது சராசரி உறக்க நேரத்தை குறைக்கவே செய்கிறது" என்று ரெபெக்கா கூறுகிறார்.
 
உடனடியாக தூக்கம் வருவதற்கும், நீண்ட, ஆழ்ந்த தூக்கத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
 
கட்டுக்கதை 3 - டிவி பார்த்தால் உடல் தளர்வடையும்
 
"வேலையை முடித்து வீட்டிற்கு வருவதற்கு நேரமாகிவிட்டது; உடல் அசதி தாங்கவில்லை; சிறிது நேரம் தொலைக்காட்சியை பார்த்தால் உடல் தளர்வடைவதுடன், தூக்கமும் வந்துவிடும்" என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறான செயல்பாடு என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 
தொலைக்காட்சி பெட்டி மட்டுமின்றி, கணினி, அலைபேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனத்தின் திரையை நீங்கள் உற்றுநோக்கியபடி இருந்தாலும், அது தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோனை சுரக்கவிடாமல் செய்துவிடும்.
 
கட்டுக்கதை 4 - தூக்கம் வரவில்லை என்றாலும், கட்டிலைவிட்டு எழ வேண்டாம்
ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும், ஆனால் பலருக்கு அப்படி இருப்பதில்லை. எனவே, தூக்கம் வராத பலரும், தூக்கம் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆனாலும் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
 
தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?
இந்த செயல்பாடு உடல் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமின்றி, மன நலம் சார்ந்த சிக்கல்களுக்கு வித்திடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
"பொதுவாக ஒருவருக்கு படுக்கைக்கு சென்றவுடன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் தூக்கம் வர வேண்டும். அப்படி தூக்கம் வரவில்லை என்றால், உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து வேறுபட்ட சூழலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று ரெபெக்கா கூறுகிறார்.
 
கட்டுக்கதை 5 - தினமும் அலாரத்தை ஸ்னூஸ் பண்ணிட்டு தூங்கிறீங்களா?
 
எந்த வயது பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், காலை நேரத்தில் சரியான நேரத்தில் எழுந்து கொள்வதையே விரும்புகின்றனர். அதிலும், குறிப்பாக ஐந்து நிமிடம் தூங்கினாலும், ஒரு மணிநேரம் தூங்கியதை போன்ற உணர்வை பெறுவதாக நினைத்து அலாரம் அடித்தவுடன் ஸ்னோஸ் பட்டனை அழுத்திவிட்டு மீண்டும் படுக்கைக்கு செல்கின்றனர்.
 
மேற்கண்ட செயல்பாடு, உங்களது தூக்கத்தின் தரத்தை குறைப்பதோடு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டை திணறடிக்க செய்கிறது.
 
எனவே, நாளை காலை நீங்கள் எழுந்து கொள்ளும்போது, மீண்டும் தூக்கம் வருவது போன்று இருந்தால், பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும் இடத்தை நோக்கி செல்லுங்கள்; தூக்கம் பறந்துவிடும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவைத் தேர்தல்: மோதியை எதிர்த்து வாரணாசியில் போட்டியா? - பிரியங்கா காந்தி பதில்