Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கடற்கன்னிகள்' எப்படி உருவானார்கள்?

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (11:36 IST)
1837 இல் வெளியிடப்பட்ட டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதையின் தழுவலான "தி லிட்டில் மெர்மெய்ட்"-டின் புதிய பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
 
இது ஏற்கனவே 1989ஆம் ஆண்டு டிஸ்னியால் அனிமேஷன் படமாக திரைக்கு கொண்டு வரப்பட்டது.
 
ஆண்டர்சனின் கதை மற்றும் இரண்டு திரைப்படத் தழுவல்களிலும், கதாநாயகி மீன் வால் மற்றும் வசீகரிக்கும் குரல் கொண்ட ஓர் அழகான இளம் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளார். கடற்கன்னிகள் எப்போதும் இப்படித்தான் சித்தரிக்கப்படுகிறார்களா?
 
முதல் கடற்கன்னி
 
மேற்கத்திய இலக்கியங்களில் கடற்கன்னிகள் பற்றிய முதல் குறிப்பு ஹோமரிக் ஒடிஸிக்கு முந்தையது. ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது தாயகமான இத்தாகாவுக்குத் திரும்பியபோது நாயகன் ஒடிஸியஸ் மத்தியதரைக் கடலில் பல கடினமான தருணங்களை எதிர்கொண்டார். கடல் மோகினி உட்பட ஆபத்தான உயிரினங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
 
இந்த அனைத்து ஆபத்துகள் குறித்தும் மந்திரவாதி சிர்ஸ் எச்சரிக்கிறார். அதில் முதன்மையான ஆபத்து ஆண்களை மயக்கும் கடல் மோகினிகள்.
 
எச்சரிக்கையின்றி அணுகி, அவர்களின் குரலைக் கேட்ட யாரும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பவில்லை. அந்த கடல் மோகினிகள் தற்போதைய நியோபோலிடன் கடற்கரையில் எங்காவது வசிக்கும். அவர்கள் இனிமையான பாடல் மூலம் ஆண்களை மயக்கி தக்கவைத்துக்கொள்கிறார்கள். இதனால் கடற்கரை மாலுமிகளின் எலும்புகளால் நிறைந்துள்ளது.
 
கடற்கன்னிகளின் இனிமையான குரலை ஆபத்து இல்லாமல் ரசிக்க சிர்ஸின் அறிவுரையை ஒடிஸியஸ் பின்பற்றுகிறார். அவர் தன்னை பாய்மரத்துடன் கட்டுகிறார். அவரது ஆட்கள் தங்கள் காதுகளை மெழுகால் மூடிக்கொள்கிறார்கள். ஹோமர் அவற்றை விவரிக்கவில்லை. ஆனால் அதை விவரிக்கும் வகையான மட்பாண்டங்கள் நம்மிடம் உள்ளன. அவை கடல் மோகினியை பாதி பெண், பாதி பறவையாகக் காட்டுகின்றன.
 
பண்டைய புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் தேவதைகள் போன்ற கலப்பின உயிரினங்கள் உள்ளன. அவற்றின் உடலின் பாகங்கள் மனித வடிவிலும், பிற பகுதிகள் விலங்கு அம்சத்துடனும் உள்ளன. ஆண்களின் வீழ்ச்சியுடன் தொடர்புடைய அவையனைத்தும் எதிர்மறையானவை.
 
கவர்ச்சியான மீன் வால்
மீன் வால்களுடன் கூடிய தேவதைகளை விவரிக்கும் முதல் பதிவு "புக் ஆஃப் மான்செஸ்டர்ஸ் ஆஃப் வேரியஸ் கைண்ட்ஸ்’’ என்ற லத்தீன் மொழி புத்தகத்தில் உள்ளது.
 
"கடற்கன்னிகள் மாலுமிகளை தங்கள் அழகான தோற்றத்தாலும் பாடலின் இனிமையாலும் ஏமாற்றுகின்றன. தலை முதல் தொப்புள் வரை அவை ஒரு கன்னியின் உடலைக் கொண்டு மனிதர்களைப் போலவே உள்ளன. அதற்கு கீழே செதில்களால் ஆன மீன் வால்களைக் கொண்டுள்ளன.
14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளரும் மனிதநேயவாதியுமான போக்காசியோ, தன்னுடைய ’Genealogy of the pagan gods’ என்ற புத்தகத்தில் பண்டைய மற்றும் இடைக்கால மரபுகளை சேகரித்து இந்த கலப்பின உயிரினங்களின் உருவகத்தை விளக்குகிறார். அவர் கடற்கன்னிகளின் அழகையும், அவர்கள் கொண்டிருந்த ஆண்களை விபச்சாரிகளாக மாற்றும் திறனையும் குறிப்பிடுகிறார்.
 
அப்போதிருந்தே அவர்கள் மோசமான பெண்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் வெறுமையான மார்பகங்கள் மற்றும் நீண்ட கூந்தலுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அப்பாவி ஆண்களை மயக்கி, அவர்களின் பணத்தை இழக்கச் செய்தல் அவர்களின் குணமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
மந்திரவாதியுடனான ஒப்பந்தம் இளவரசரை திருமணம் செய்து கொள்ளும்படி அவரைக் கட்டாயப்படுத்துகிறது. அதைச் செய்யாவிட்டால் தான் இறந்து கடல் நுரையில் கரைந்துவிடுவேன் என்பது கடற்கன்னிக்குத் தெரியும். ஆனால், இளவரசனோ தன்னை இளவரசிதான் காப்பாற்றினார் என்று நம்பி அவரைத் திருமணம் செய்துகொள்கிறார்.
 
இறக்காமல் இருக்க மந்திரவாதி கடற்கன்னிக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார். அதன்படி, இளவரசனை கொன்றால் மீண்டும் அவர் முழுமையான கடற்கன்னி ஆகிவிடலாம். ஆனால், இளவரசனை கொல்ல மனமில்லாமல் உடனே கடலில் விழுகிறாள். அவர் கொண்டிருந்த காதலின் பலனாக, கடலில் கரைவதற்குப் பதிலாக நல்ல செயல்களைச் செய்தால் கிடைக்கும் அழியாத ஆன்மா அவருக்கு கிடைக்கிறது.
 
21ஆம் நூற்றாண்டு கடற்கன்னிகள்
கடற்கன்னிகளுக்கு அழகான தோற்றம் இருந்தாலும் அவர்கள் மீதான எதிர்மறையான பார்வை இன்னும் உள்ளது. எனவேதான், ’கடற்கன்னி பாடல்கள்’ இனிமையான வஞ்சகத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
 
அதே நேரம் ஆண்டர்சனின் கதையில் உள்ளதைப் போல கடற்கன்னிகள் மீது நேர்மறையான பார்வையும் உள்ளது.
 
அதற்குச் சான்றாக, கோபன்ஹேகன் நகரின் அடையாளக் குறியீட்டில் சிறிய கடற்கன்னியையும் ஸ்டார்பக்ஸ் லோகோவில் உள்ள இரட்டைவால் கடற்கன்னியையும் கூறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments