Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கு தகுதியற்றவரா?

கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கு தகுதியற்றவரா?
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:50 IST)
கமலா ஹாரிஸ் குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் குறித்த பல தவறான தகவல்களும் வதந்திகளும் இணையத்தில் பரவி வருகின்றன. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பராக் ஒபாமா அதிபர் பதவிக்கு போட்டியிடும்போது அவரது "பிறப்பிடம்" குறித்து ஆதாரமற்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டது.
 
அதுபோலவே, தற்போதும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளர் போட்டிக்கு தகுதியற்றவர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
 
ஆனால், கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், தாய், இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் பிறந்தது அமெரிக்காவில்  உள்ள கலிஃபோர்னியாவில்தான்.
 
உண்மை என்ன? அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்க பிரஜையாக இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்நாட்டின் அதிபராகவோ, துணை அதிபராகவோ பதவி வகிக்க  தகுதி பெற்றவர்களே.
 
கடந்த 7 நாட்களாக கூகுள் டிரெண்ட்ஸில் கமலா ஹாரிஸின் பிறப்பிடம் குறித்தும், அவரது பிறப்பிடம் தொடர்பான மற்ற விஷயங்கள் குறித்தும் அதிகளவிலான  மக்கள் தேடியுள்ளனர்.
 
கமலா ஹாரிஸ் தனது பாரம்பரியத்தை மறைத்தாரா?
 
பல சமூக ஊடக தளங்களில் கமலா ஹாரிஸ் தனது பாரம்பரியத்தை மறைத்ததாக தவறான கருத்துகள் பரவலாக பகிரப்படுகின்றன்.
 
அதில் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, அவர் தன்னை கருப்பின அமெரிக்க பெண் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என  குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
இது தவறானது. தனது இந்திய - அமெரிக்க பாரம்பரியம் குறித்து அவர் எப்போதும் வெளிப்படையாகவே பேசி வந்தார்.
 
தனது சுயசரிதை புத்தகத்தில், "இரண்டு கருப்பின பெண்களை வளர்க்கிறோம் என்பதை நன்கு அறிந்தே எங்கள் அம்மா எங்களை வளர்த்தார். அவர் குடியேறிய நாடு  என்னையும், என் தங்கை மாயாவையும் கருப்பின பெண்களாகவே பார்க்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். எனினும், எங்களை தன்னம்பிக்கை மிகுந்த, பெருமை மிகுந்த கருப்பின பெண்களாகவே வளர்த்தார்" என கமலா ஹாரிஸ் எழுதியிருப்பார்.
 
"கமலா ஹாரிஸ் தனது இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டே வளர்ந்தார். அதே நேரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாக பெருமையாக வாழ்ந்தார்" என வாஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.

webdunia
மேலே உள்ள இந்தப் புகைப்படம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஆயிரம் முறைக்கு மேலாக பகிரப்பட்டுள்ளது. இதில் ஏபி செய்தி முகமையில் வெளியான செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
 
முதலாவது, 2016ல் இந்திய பாரம்பரியத்தை சேர்ந்த முதல் பெண்ணான கமலா ஹாரிஸ் செனட்டரானது குறித்த செய்தி.
 
அடுத்தது, சமீபத்தில் அவர் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்காவின் முதல் கருப்பின துணை அதிபர் வேட்பாளர் என குறிப்பிட்டு  வெளியான செய்தி.
 
அதாவது, ஜோ பைடன், கமலாவை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்த பின்புதான், ஊடகங்கள் அவரை கருப்பினப் பெண் என ஊடகங்கள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இல்லையெனில், தற்போதுதான் ஹாரிஸ் தன்னை இந்திய கலாசாரத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வதாக காட்டப்படுகிறது.
 
மேலே கூறியதுபோல, இந்த பிம்பம் தவறானது.
 
2016ல் கமலா ஹாரிஸ் செனட்டராக ஆனபோது ஏபி செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், அவரை இந்திய அமெரிக்க பெண் என்றும் கருப்பின பெண் என்றும்  குறிப்பிட்டிருந்தது.
 
ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளருக்கு பரிந்துரைத்தது யார்?
 
ஜனநாயக கட்சியின் முக்கிய நன்கொடையாளரான ஹங்கேரியை சேர்ந்த கோடீஸ்வரரான ஜார்ஜ் சாரஸ் முடிவினாலேயே, கமலா ஹாரிஸ் துணை அதிபர்  வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது.
 
இதற்கான எந்த ஆதாரமும் இல்லை..
 
கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜார்ஜ் சாரஸ் தனது ட்விட்டரில் பதவிட்டிருந்தார். ஆனால், இதை வைத்து, அவர் எடுத்த முடிவால்தான் கமலா  ஹாரிஸ் பரிந்துரைக்கப்பட்டார் என்ற முடிவுக்கு வர முடியாது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை; மீனவர்களுக்கு அதிபர் ராஜபக்‌ஷே எச்சரிக்கை!