Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்காக 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த நாமக்கல் இளைஞர்

தமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்காக 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த நாமக்கல் இளைஞர்
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (13:31 IST)
தமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்கான 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த இளைஞரிடம் அத்தொகையைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள்.

தமிழ்நாட்டில் 2 கோடியே 16 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன் உள்ளது என்று மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி சமீப நாட்களில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ் தியாகராஜன் என்பவர் 2,63,976 ரூபாய்க்கான வங்கி காசோலை மற்றும் காசோலை போன்ற பெரிய அட்டை ஆகியவற்றுடன்நேற்று நாமக்கல் கோட்டாட்சியர் மு‌.கோட்டை குமாரை அணுகியுள்ளார்.

காந்தியவாதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் ரமேஷ் தியாகராஜன், அப்போது அவர் மகாத்மா காந்தியைப் பிரதிபலிக்கும் வகையிலான ஆடையை அணிந்திருந்தார். ரமேஷ் தியாகராஜனிடம் இருந்து அந்தக் காசோலையை வாங்கிக்கொள்ள கோட்டாட்சியர் மறுத்துவிட்டார்.

அந்தக் காசோலையை வாங்க தமக்கு அதிகாரம் இல்லை என்றும், உயர் அதிகாரிகளிடம் அதை வழங்குமாறும் அவர் ரமேஷிடம் கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கை நேரில் சந்தித்து அதே காசோலையை வழங்க முயன்றார் ரமேஷ். ஆட்சியரும் அந்தக் காசோலையை வாங்க மறுத்து, இளைஞரைத் திருப்பி அனுப்பினார்.

தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு உயந்துள்ளது?

தமிழகத்தின் 2020-21 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999-2000 - ரூ.18,989 கோடி2000-2001 - ரூ.28,685 கோடி2001-2002 - ரூ.34,540 கோடி2005-2006 - ரூ.50,625 கோடி2011-2012 - ரூ.1,03,999 கோடி2015-2016 - ரூ.2,11,483 கோடி2017-2018 - ரூ.3,14,366 கோடி2020-2021 - ரூ.4,56,660 கோடி2021 - ரூ.4,85,502 கோடி

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூவி அழைத்தாலும் தடுப்பூசி போட வருவதில்லை! – மருத்துவத்துறை செயலாளர்!