Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய உச்சம்: பிட்காயின் மதிப்பு ரூ.50 லட்சத்தை எட்டியது - யார் இந்த பிட்காயின் திமிங்கலங்கள்?

புதிய உச்சம்: பிட்காயின் மதிப்பு ரூ.50 லட்சத்தை எட்டியது - யார் இந்த பிட்காயின் திமிங்கலங்கள்?

Sinoj

, செவ்வாய், 5 மார்ச் 2024 (22:58 IST)
கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.
 
பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன.
 
இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் 'பிட்காயின் திமிங்கலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
 
பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும்.
 
நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொடுத்தும் வாங்கலாம்.
 
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
 
பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.
 
பிட்காயின் முதலீடு
பிட்காயின் அமைப்பின்படி மொத்தமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கமுடியும்.
 
அதில் இதுவரை 1.9 கோடி பிட்காயின்கள் மைனிங் செய்யப்பட்டு, அவை பரிமாற்றத்தில் உள்ளன.
 
‘பிட்காயின் மைனிங்’ என்பது உருவாக்கப்பட்ட பிட்காயினை கணினி உதவியுடன் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் நடைமுறை ஆகும். உலகம் முழுவதும் இந்த பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
 
‘பிட்காயின் திமிங்கலங்கள்’ யார்?
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், இந்த டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்துள்ளனர்.
 
மொத்தமுள்ள 2.1 கோடி பிட்காயின்களில், சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடம் இந்த பிட்காயின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. அவ்வாறு அதிக பிட்காயின்களை வைத்து அதன்மூலம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களை ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ என்று முதலீட்டாளர்கள் வர்ணிக்கின்றனர்.
 
உலகம் முழுவதும், அதிக பிட்காயினை வைத்துள்ளவர்கள் விவரத்தை பிப்ரவரி 29 வரை எடுத்தபோது சில தகவல்கள் தெரியவந்தன. கீழேயுள்ள புள்ளிவிவரங்கள், நேரடி ஆராய்ச்சி மற்றும் பொது தளத்தில் கிடைக்கும் தகவல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகும்.
 
60 லட்சம் பிட்காயின்கள் காணாமல் போனது எப்படி?
பிட்காயின் முதலீடு
மொத்தமுள்ள பிட்காயின்களில் சில லட்சம் பிட்காயின் காணாமல் போய் விட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அச்சிடப்பட்ட பணத்தை தொலைப்பது போல பிட்காயின்களை தொலைக்க முடியுமா?
 
பிட்காயின்கள் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் இயங்கும் பணம் என்பதால் இதை பாதுகாக்க பல அடுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
 
பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிட்காயின் கரன்சி பரிமாற்றம் நடக்கிறது. இந்நிலையில் ஒரு பயனர், தனது பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும்(பாஸ்வேர்டு) மறந்தால் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை மீட்பது கடினம்.
 
பிட்காயின் பரிமாற்றத்தில், வாடிக்கையாளர் சேவை ஏதும் இல்லாத நிலையில், கணக்குகளை மறந்ததால் லட்சகணக்கான பிட்காயின்கள் உரிமை கோர ஆள இல்லாமல் நிரந்தரமாக காணாமல் போகின்றன.
 
முப்பது முதல் அறுபது லட்சம் பிட்காயின்கள் இப்படி காணாமல் போய் இருக்கலாம் என்கிறனர் வல்லுநர்கள். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தூக்கி எறிந்த தனது ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்பட்ட வாலட் கணக்கால் 8000 பிட்காயின்களை இழந்தார்.
 
குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிட்காயின் பரிமாற்றமும் நாளடைவில் காணாமல் போகின்றன என்று கிரிப்டோ-புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எலிப்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளான செயல்பாடில்லாத நிலையில் 31.5 லட்சம் பிட்காயின்கள் இருக்கின்றன. இவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடில்லாமல் இருக்கும் இந்த பிட்காயின்களால், நிரந்தரமாக காணாமல் போகும் பிட்காயின்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று செயின்லைஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளார்கள் கூறுகின்றனர்.
 
காணாமல் போன பிட்காயின் குறித்து இப்படி பலரும் ஒரு மதிப்பீட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் 11 லட்சம் பிட்காயின், அடையாளம் தெரியாத ஒரு நபருக்கு சொந்தமாக இருக்கலாம் என்றும், அவர் தான் பிட்காயினை உருவாக்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
 
அப்படியெனில் 24 லட்சம், அதாவது மொத்த பிட்காயினில் 11% பங்கு சந்தையில் இருந்து நிரந்தரமாக காணாமல் போய்விட்டதாக மதிப்பிடப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் யார்? அண்ணாமலை நாளை டெல்லி பயணம்!