Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கை: 70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன

இலங்கை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மூடப்படவுள்ளன, Fuel Stations, Sri Lanka, Temporarily closed
, திங்கள், 27 ஜூன் 2022 (09:40 IST)
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகளை வெளியிடும் நியூஸ் ஃப்ர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


அந்தச் செய்தியின்படி, 30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றுக்கிணங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே எரிபொருள் கிடைக்கும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுதொகை எரிபொருளே விநியோகிக்கப்பட்டுள்ளதால், 20 வீதமானோருக்கேனும் எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால், ராணுவ பாதுகாப்பை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால், 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு போடப்படுவது அவசியம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வலியுறுத்தினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பை பங்குச்சந்தை முதல் நாளிலேயே உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி