Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிஷ்க் தீபாவளி விளம்பரம் மீண்டும் சர்ச்சையில்...

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (15:18 IST)
இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தனிஷ்க் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட விளம்பரம் ஒன்று சர்சையாகி அதனை நீக்கியதை தொடர்ந்து தற்போது மீண்டும் அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
 
இந்து மத கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு எதிராக இந்த விளம்பரம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தையும் தனிஷ்க் நீக்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான ஒரு புதிய விளம்பரத்தில், பெண்கள் தாங்கள் எப்படி தீபாவளியை கொண்டாட நினைக்கிறார்கள் என்பதை பகிர்ந்திருப்பார்கள்.
 
திரைப் பிரபலங்களான நீனா குப்தா, சயானி குப்தா, ஆலயா மற்றும் நிம்ரத் கௌர் இதில் நடித்திருக்கிறார்கள். இதில் ஒருவர் தீபாவளி குறித்து பேசுகையில், "நிச்சயம் பட்டாசுகள் கிடையாது. யாரும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நிச்சயம் அகல் விலக்குகளை ஏற்றுங்கள்" எனக் கூறியிருப்பார்.
 
இதற்கு சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து மத நிகழ்வுகளை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லித்தர வேண்டாம் என்று பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தனிஷ்க்கை புறக்கணிக்கும்படி கூறி வருகிறார்கள்.
 
பட்டாசு வெடிக்காமல் இருக்குமாறு கூறியதில் எந்த தவறும் இல்லை என்று சிலரும், வேறு சிலர் விளம்பரத்திற்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு டெல்லி, ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் காற்று மாசு மற்றும் கொரோனா தொற்று காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன.
 
முன்னதாக, தீவிர வலதுசாரி ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பால் தாம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை விலக்கிக்கொண்டது. தனது இஸ்லாமிய புகுந்த வீட்டினர், ஓர் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்வதைப் போல அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
 
அந்த விளம்பரம் 'லவ் ஜிகாத்தை' தூண்டும் விதத்தில் இருப்பதாக தீவிர இந்து வலதுசாரிகள் குற்றம் சாட்டினர். தனிஷ்க் நிறுவனத்தில் நகை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தி '#boycotttanishq' #BoycottTanishqJewelry #boycotttanisq ஆகிய ஹேஷ்டேக்குகள், ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments