Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

யுக்ரேன் தலைநகர் கீயவில் குண்டுவெடிப்புகள்

யுக்ரேன் தலைநகர் கீயவில் குண்டுவெடிப்புகள்
, புதன், 30 மார்ச் 2022 (13:22 IST)
யுக்ரேன் தலைநகர் கீயவில் இன்று காலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.


கீயவில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலியுடன் இன்றைய நாள் தொடங்கியதாகவும், அதைத்தொடர்ந்து பெரும் குண்டுவெடிப்புகள் புறநகர் பகுதிகளில் நிகழ்ந்ததாகவும், அதனை கீயவின் மையப்பகுதியில் உள்ள தான் உணர்ந்ததாகவும், பிபிசி நிருபர் லைஸ் டூசெட் தெரிவித்துள்ளார்.

மேலும், "கீயவில் துப்பாக்கிசூடு சத்தமும் கேட்டது" என, அங்குள்ள மற்றொரு நிருபர் ஜெரிமி போவென் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது ரஷ்ய தரப்பா அல்லது யுக்ரேன் தரப்பா அல்லது இரண்டுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று நடந்த இருநாட்டு பேச்சுவார்த்தையில் தலைநகர் கீயவை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. ரஷ்யாவின் இந்த கூற்று எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் என, மேற்கு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுக்ரேன் – ரஷ்யா மோதல்: ‘மக்களுக்கு எதிராக தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது ரஷ்யா' – யுக்ரேன்