ரஜினியின் 2.0 திரைப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ந்துள்ளது இங்கிலாந்தின் டெர்பி நகர போலீஸ். இதனை அவர்கள் பகிர்ந்ததற்கான காரணம் சுவாரஸ்யமானது.
அப்படி என்ன காரணம்?
வாகன சோதனையில் டெர்பி போலீஸ் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். குடித்துவிட்டு வண்டி ஒட்டுகிறார்களா என்று பரிசோதிக்கும் வழக்கமான சோதனைதான். ஆனால், அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
இவ்வாறாக ஒருவரை பரிசோதிக்கும் போது, அவரது மூச்சுக் காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் அளவு இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் தினந்தோறும் நடப்பதுதானே? இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? ஆச்சர்யம் இருக்கிறது.
இந்த அளவு என்பது ஒருவருக்கு அனஸ்தீசியா கொடுக்கும் போதோ, அல்லது ஒருவர் கோமா நிலையுல் இருக்கும் போதோ இருக்கும் அளவு. அதாவது, ஒருவர் முற்றும் செயலிழந்து இருக்கும் நிலை. ஆனால், அவர் சாவகாசமாக வாகனம் ஒட்டி வந்திருக்கிறார்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டெர்பி போலீஸ். அதன் கீழே 2.ஓ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியின் ஃபோட்டோவை பகிர்ந்து, அதில் வரும் 'இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது' என்ற வசனத்தையும் பகிர்ந்துள்ளது.