Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34,000 மோசடி

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34,000 மோசடி
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளை ஒரு நபர் ஆன்லைன் மூலம் 34 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் கடந்த திங்களன்று இணையதளம் ஒன்றின் மூலமாக ஒரு பழைய சோஃபாவை விற்பதற்கான விளம்பரத்தை செய்துள்ளார்.
 
அதை வாங்க முன் வருவதாகக் கூறிய நபர் ஒருவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா அளித்திருந்த வங்கிக் கணக்கில் சிறிய தொகை ஒன்றை  செலுத்தியுள்ளார்.
 
அதன் பின்னர் அந்த சோஃபாவை வாங்குவதற்கு அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் கூறிய தொகையைத் தருவதாக கூறி க்யூ.ஆர் கோடு (QR Code) ஒன்றை  ஸ்கேன் செய்யுமாறு அவரிடம் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் அவரது கணக்குக்கு மாறியது. இது குறித்து ஹர்ஷிதா கேள்வி எழுப்பிய பொழுது தவறாக  வேறு க்யூ.ஆர் கோடு அனுப்பி விட்டதாகவும் புதிய க்யூ.ஆர் கோடு ஒன்றை ஸ்கேன் செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.
 
இரண்டாவது முறையாக ஸ்கேன் செய்தபோது 14,000 ரூபாய் அவரது கணக்கிலிருந்து பறிபோனது.
 
ஹர்ஷிதா அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 560 ரூபாய் விலையேறிய தங்கம்!