Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி வெடிக்கச் செய்ததாக கூறும் யுக்ரேன்

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:20 IST)
முன்னதாக, ரஷ்யாவின் ஏவுகணை தாங்கிய மோஸ்க்வா போர்க்கப்பல், யுக்ரேன் தயாரித்த நெப்டியூன் ஏவுகணையால் குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக, யுக்ரேன் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரியவந்துள்ளன. அதில், போர்க்கப்பலில் தீப்பற்றியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அந்த கப்பலை ரஷ்ய மீட்புப்படையினரால் அடைய முடியவில்லை எனவும், அக்கப்பலில் 510 பணியாளர்கள் இருந்ததாகவும் யுக்ரேன் அதிபரின் உதவியாளரான ஒலேக்ஸி அரேஸ்டோவிச் தெரிவித்துள்ளார்.

"மோஸ்க்வா என்ற ஏவுகணை இன்று பாம்புத் தீவில் எங்களின் எல்லைக் காவலர்களால் அனுப்பப்பட்ட இடத்திற்குச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது!" என, ஒடேசா ஆளுநர் மக்ஸிம் மர்சென்கோ தன் டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளான பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற நிகழ்வை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளன்று ஸ்மீன்யீ (பாம்பு) தீவினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு 13 யுக்ரேனிய வீரர்கள் இறந்ததாக நம்பப்பட்டது. ஆனால், அவர்கள் கைதிகளாக ரஷ்ய கைப்பற்றியிருந்த கிரைமியாவில் வைக்கப்பட்டதாக பின்னர் வந்த தகவல்களில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments