யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் வியாழன் காலை 7 மணி வரை, ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.
“வெடிகுண்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான புகலிடங்களுக்குச் செல்வதைத் தவிர, சிறப்பு அனுமதியின்றி நகரத்தைச் சுற்றி வருவது தடை செய்யப்பட்டுள்ளது,” என்று தலைநகரத்தின் மேயர் விட்டலி கிளிச்கோவ் கூறினார்.
“தலைநகரம் யுக்ரேனின் இதயம். அது பாதுகாக்கப்படும். தற்போது ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகவும் இதனை இயக்கத் தளமாகவும் இருக்கும் கீயவ் நகரத்தைக் கைவிட மாட்டோம்,” என்று கூறியுள்ளார்.
இன்று கடினமான மற்றும் ஆபத்தான தருணம். இதனால் தான் அனைத்து கீயவ் மக்களுக்கும் இரண்டு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கத் தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
from விட்டலி கிளிச்கோவ் மேயர், யுக்ரேன் தலைநகர் கீயவ்.