Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் போர்: டோன்பாஸில் நிலைமை மோசம் - யுக்ரேன் ஆலோசகர்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (00:06 IST)
யுக்ரேன் டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது என்று யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
 
யுக்ரேன் நாட்டின் கிழக்கு டோன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல் குறித்து யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரி சாக் பிபிசியிடம் கூறுகையில், யுக்ரேன் படையினரை "சிறு பகுதிக்குள் சுற்றி வளைத்து, அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
 
யுக்ரேன் படைகள் தங்கள் நிலையைத் தொடர்கின்றனர். அவர்கள் வசம் உள்ள பகுதிகளைக் காக்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார். "ரஷ்ய படையினர், அதிக துப்பாக்கி, அதிக கனரக பீரங்கிகளைக் கொண்டு, அப்பகுதிகளை 24/7 என தொடர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
 
பொதுமக்களின் வீடுகள், மக்களின் கட்டுமானங்கள் மற்றும் யுக்ரேன் ராணுவத்தையும் தாக்குகிறார்கள்" என்று சாக் கூறுகிறார்.
 
"நிலைமை மிக மிக தீவிரமானது. யுக்ரேன் படைகள் மேற்கு நாடுகளிடம் இருந்து, தாங்கள் நீண்ட காலமாக கோரி வரும் கனரக ஆயுதங்களை நிச்சமாக எதிர்பார்த்துள்ளனர்." என்கிறார்.
 
அதேநேரத்தில், 'டோன்பாஸில் சண்டையிடும் போது, யுக்ரேன் படையினர் பொதுமக்களின் கட்டுமானங்கள் மீது "அட்டூழியமான" தாக்குதல்களை நடத்தியதாக' ரஷ்யா குற்றம் சாட்டியதாக ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments