Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனையை நிறைவேற்றும் அமெரிக்கா!

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (11:08 IST)
சுமார் 16 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை பணியகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்,
 
விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள ஐந்து கைதிகளும் குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐந்து கைதிகளுக்காக மரண தண்டனை முறையே வரும் டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றுவதற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது. 
 
இருவேறு கட்சிகளின் நிர்வாகத்தின் போதும், மிகவும் மோசமான குற்றவாளிகளுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று வில்லியம் பார் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு மாதம் ரூ.3000.. இலவச பேருந்து.. மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி..

இரவு முதல் அதிகாலை வரை மழை.. குளிர்ந்தது சென்னை..!

திருமணம் ஆகாத விரக்தி: கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யால் அரசியலில் வெற்றி பெற முடியாது: பிரயோஜனம் இல்லை: ரஜினியின் சகோதரர் பேட்டி

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறித்த சென்னை நபர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்