Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அமெரிக்காவிடம் இருந்து இரானிய எண்ணெய் கப்பல்களுக்கு வெனிசுவேலா பாதுகாப்பு!

அமெரிக்காவிடம் இருந்து இரானிய எண்ணெய் கப்பல்களுக்கு வெனிசுவேலா பாதுகாப்பு!
, வெள்ளி, 22 மே 2020 (14:12 IST)
இரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், இரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது.
 
அந்து எண்ணெய் கப்பல்கள், விரைவில் வெனிசுவேலா வரவுள்ளன. இந்த கப்பல்களில் வரும் பெட்ரோல், வெனிசுவேலாவுக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.
வெனிசுவேலா மற்றும் இரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, இரு நாடுகளுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறது.
 
உலகின் மிகப்பெரிய, பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களை வெனிசுவேலா வைத்திருந்தாலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடந்த இரு தசாப்தங்களாக எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் எண்ணெய் வளம் இருந்தாலும், பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில், எண்ணெய் துறை எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம் என அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்து வரும் வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் கூடுதலாக 13 மதுக்கடைகள் திறக்க அனுமதி: எங்கே தெரியுமா?