நட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது அதற்கான பொறுப்பு என்பது மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அதே நேரம் விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது கறாராக இருக்கும்.
இது மறைந்த நடிகை ஶ்ரீதேவி தம்பதியின் செல்ல மகள் ஜான்வி கபூருக்கும் பக்காவாக பொருந்தும். ஆனால் சினிமாவே தனது வாழ்க்கை எனும் முடிவில் நுழைந்திருக்கும் அவர், முதல் படம் முதலாகவே தொடர்ந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என, அனைவரும் பாராட்டும் நடிப்பை வழங்கி வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் கதாப்பாத்திரங்களில் அதீத கவனம் கொண்டிருக்கிறார். தனது கதாப்பாத்திரங்களுக்கு அவர் மிகுந்த பிரயத்தனத்துடன் திரையில் உயிர் தருவதில் வல்லவராக இருக்கிறார். தனது சிறப்பிலும் சிறப்பான நடிப்பை அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து கொடுத்து வரும் அவர் இந்த 2020 புதிய வருட தொடக்கத்தின் ஆரம்பத்திலேயே, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் தயாரிப்பான ஆந்தாலஜி படம் “கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்தில் ஒரு பகுதியில் நடித்துள்ளார்.
அப்படத்தில் அவரது பிரமிப்பு தரும் நடிப்பு ரசிகர்கள் விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றியிருந்தாலும் மற்ற நடிகர்களிடமும் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கியுள்ள பகுதியில் இளம் செவிலியராக நடித்திருக்கிறார் ஜான்வி கபூர். தனது காதலன் மீது அதிக அன்பு கொண்டவராகவும் ஒரு அபார்ட்மெண்டில் மாட்டிக்கொண்ட பெண்ணின் தவிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஹாரர் படத்தின் மையமே பயமும் திகிலும் தான்.
ஜான்வி கபூர் அந்த கதாப்பாத்திரத்தில் ஒன்றி பயத்தையும், திரில் உணர்வையும் நமக்குள் அட்டகாசமாக கடத்தியிருக்கிறார். நடிக்க ஆரம்பித்திருக்கும் இந்த இளம் வயதில், வெகு சில படத்திலேயே ஒரு நல்ல நடிகை எனும் பெயரை பெற்றிருக்கிறார் ஜான்வி கபூர். இணையவாசிகள் தொடங்கி டிவிட்டர் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் இருந்து ஜான்வி கபூருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. எனவே இந்த வருடத்தின் ஆரம்பமே அவருக்கு அருமையான ஒன்றாக அமைந்திருக்கிறது.