Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

மகள் காதலுக்கு பச்சை கொடி காட்டிய அமீர் கான் - நிச்சயதார்த்தம் பண்ணி வச்சிட்டாரேப்பா!

Advertiesment
ameer khan ira khan
, திங்கள், 21 நவம்பர் 2022 (12:30 IST)
மகள் காதலுக்கு பச்சை கொடி காட்டிய அமீர் கான் - நிச்சயதார்த்தம் பண்ணி வச்சிட்டாரேப்பா!
 
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
 
தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
ameer khan ira khan
பின்னர் 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார். பின்னர் இரண்டாவது மனைவியையும் இருந்துவிட்டார்.
 
மனைவியை பிரிந்தாலும் அமீர்கான் தனது மூன்று குழந்தைகளையும் பாரபட்சமின்றி பாசத்துடன் பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் மகள் ஐரா கானின் காதலரான  நுபுர் ஷிகாரேவை அவருக்கு நிச்சயம் செய்து வைத்துவிட்டார். நுபுர் செலிபிரிட்டி பிட்னஸ் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் கியரா அத்வானி - இது மாடர்ன் கிளிக்ஸ்!